தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பறை அணைக்கு அருகே உள்ள ஊரடி, ஊத்துக்காடு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. தொடர்ந்து, கொழுந்து விட்டு எரிந்ததால் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாயின.
மேலும், இந்த காட்டுத் தீயால் வன விலங்குகள் வெப்பம் தாங்காமல் விலை நிலங்களுக்குள் புகும் நிலை உருவாகி உள்ளது.
தேனி வனப்பகுதியில் காட்டுத் தீ இந்நிலையில், சமூக விரோதிகள் யாரேனும் வனப்பகுதயில் தீ வைக்கின்றனரா? இல்லை இயற்கையாகவே தீ பற்றி எரிகிறதா? என கண்டறிந்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ - அரியவகை மரங்கள் எரிந்து சேதம்