தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை பகுதியில் ஆண்டிகுளம், உருட்டி குளம் ஆகிய இரண்டு குளங்களுக்கும் இடையே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 60 ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, இரு போக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும், முதல் போக சாகுபடியை 25 நாட்களுக்கு முன்பாக விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.
இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஆண்டிகுளம் நிறைந்தது. மேலும் குளத்தில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேறி, கீழுள்ள உருட்டி குளத்திற்கு வந்த நிலையில், நீர் செல்ல வழி இல்லாமல் அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை சூழ்ந்துள்ளது.
இதையும் படிங்க:போடியில் மழையால் செடியிலேயே அழுகி வீணான செவ்வந்தி பூக்கள்.. டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்!