சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் இழுப்பங்குடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் எல்லைப் பாதுகாப்பு படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் ஆரோக்கியமான உடல் கட்டமைப்பைப் பேணிக் காப்பதற்காகவும், பிட் இந்தியா திட்டத்தின் கீழ் சிவகங்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் சார்பாக சைக்கிள் பேரணி தேனி மாவட்டத்தில் இன்று (டிச.28) தொடங்கியது.