விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்ட தேனி மாவட்டத்தில் சமீப காலமாகவே பருவமழை கிடைக்காததால் வயல்வெளிகள் வறண்டு பாலைவனமாக மாறத்தொடங்கி விவசாயிகளுக்கு பல்வேறு வகையான சிரமங்கள் ஏற்பட்டன.
பருவமழை வேண்டி பக்தர்கள் ஊர்வலம்! - rain pooja
தேனி: பருவமழை வேண்டி பால்குடம், கஞ்சி கலயம் சுமந்து ஓம்சக்தி பக்தர்கள் ஊர்வலம் சென்றுள்ளனர்.
பருவமழை வேண்டி பக்தர்கள் ஊர்வலம்
இந்நிலையில், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் ஓம் சக்தி வாரவழிபாட்டு மன்றம் சார்பில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், கஞ்சி கலயம் சுமந்து வழிபட்டனர்.
ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகளில் இது போன்று அம்மனுக்கு வழிபாடு நடத்துவதன் மூலம் பருவத்திற்கு மழை பெய்து செழிப்படையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.