தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் அதிகரிக்க மழை வேண்டி பூஜை! - மழை வேண்டி வழிப்பாடு பூஜை

தேனி: முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரின் கொள்ளளவு குறைந்துள்ளதால், மழை பெய்ய வேண்டி கம்பம் பகுதி விவசாயிகள் வருண பூஜையை நடத்தினார்கள்.

கம்பம் விவசாயிகள் பூஜை

By

Published : Jun 17, 2019, 9:27 AM IST

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் உயிராதாரமாக திகழ்வது முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு கோடை மழை சரியாக பெய்யாததால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைவாகக் காணப்படுகிறது. 115 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் இருந்தால் மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியும், தற்போது அணையில் 112 வரை மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர் நிரம்ப வேண்டி விவசாயிகள் மழை வேண்டி சிறப்பு பூஜை

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின்றி காணப்படுவதால் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. இதனால் போதிய மழை பெய்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்திட வேண்டி கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் தேக்கடியில் அமைந்துள்ள வனக்காளித் திருக்கோயிலில் மழை வேண்டி யாகங்கள் வளர்த்து சிறப்பு வருண பூஜை நடத்தினர்.

மேலும் முல்லைப் பெரியாற்றின் பகுதிகளிலும் பூஜை நடத்தப்பட்டு, பின்னர் கும்பத்தில் கொண்டு வரப்பட்ட தீர்த்த நீரை ஆற்றில் கலந்து வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details