தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் அவலம் - heavy rain

தேனி மாவட்டம் சங்கக்கோனம்பட்டி அருகே உடலை அடக்கம் செய்வதற்காக ஆற்றை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சடலத்தை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் அவலம்
சடலத்தை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் அவலம்

By

Published : Dec 10, 2022, 6:18 PM IST

தேனி:சங்கக்கோனம்பட்டி அருகே ராமர் என்பவர் உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலை வைகை ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக கொட்டித் தீர்க்கும் கனமழையால், வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மறு கரைக்கு செல்லமுடியாவல் ராமரின் உறவினர்கள் தவித்து வந்தனர்.

சடலத்தை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் அவலம்

இதனைத்தொடர்ந்து, டியூப்பினால் மிதவை செய்து, அதில் உடலை வைத்து ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்றனர். கழுத்தளவு நீரில் ஆபத்தான முறையில் கடந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: பூம்புகார் துறைமுக படகுகள் சேதம் - அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details