கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியப்போக்குடன் செயல்படும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை பணியிட மாற்றம் செய்திடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆட்சியருக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாகச் செயல்படுவதாகவும், கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் மாவட்ட நிர்வாகம், மருத்துவக் குழுக்களுக்கிடையே குளறுபடி தொடர்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்வரன், “கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாகச் செயல்படுகிறது.