தேனி:கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் தலைவராக நாகமணி வெங்கடேசன் மற்றும் துணைத் தலைவராக ஜெயந்தி மாலா ஆகியோர் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஊராட்சி மன்ற சாதாரண கூட்டத்தில் வரவு செலவு செய்த தீர்மானங்களில் முறைகேடு நடந்திருப்பதாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடமும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். மனு கொடுத்து 50 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஊராட்சி உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (ஆக.1) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.