கரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக நோய் பாதிப்பைப் போன்று உயிரிழப்புகளும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில், அம்மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர், சின்னமனூர், கடமலைக்குண்டு காவலர்கள் உள்பட மொத்தம் 367 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனியில் மேலும் 367 பேருக்கு கரோனா - தேனி
தேனி : இன்று (ஆக. 14) 367 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
![தேனியில் மேலும் 367 பேருக்கு கரோனா coronavirus infection for 367 people in theni](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:25:21:1597413321-tn-tni-04-theni-corona-positive-cases-script-7204333-14082020191924-1408f-02685-909.jpg)
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 489ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பெரியகுளம், கீழவடகரையைச் சேர்ந்த 75 வயது முதியவர், சின்னமனூர் புலிக்குத்தியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி, தேனி வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி, ஆண்டிபட்டி ரோசனபட்டியைச் சேர்ந்த 44 வயது பெண், தேவாரத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் என ஒரே நாளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அம்மாவட்டத்தில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறாயிரத்து 189 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் மூன்றாயிரத்து 188 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.