இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏதுவாக அரசு நுண்ணுயிரியல் துறை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வாயிலாக www.thenicovid19results.com என்ற இணையதள முகவரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
'கரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்' - ஆட்சியர் - கரோனா அப்டேட்ஸ்
தேனி: கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்த இணையதளத்தின் வாயிலாக ஒருவருக்கு கரோனா வைரஸ் முழு பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள ஏதுவாக அவர்களது கைபேசி எண்ணிற்கு பரிசோதனைக்கான அடையாள எண் அனுப்பப்படும். மேலே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் கைபேசி எண் அல்லது பரிசோதனைக்கான அடையாள எண்ணைப் பயன்படுத்தி எளிய முறையில் பரிசோதனை முடிவுகளை விரைவாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே, கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.