தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையை போல, உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்த அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், ஆண்டிபட்டி அருகே அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர், போடி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த தனியார் நடுநிலைப் பள்ளி ஆசிரியர், கூடலூர் வடக்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர், போடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர், உள்பட இன்று ஒரே நாளில் 360பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.