தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழிப்புணர்வு சிற்பங்கள் வியக்கவைக்கும் இளைஞர் - விழிப்புணர்வு சிற்பங்கள்

தேனி: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து தேனி இளைஞர் பழங்களில் சிற்பங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

வரைந்து அசத்தும் தேனி இளைஞர்
வரைந்து அசத்தும் தேனி இளைஞர்

By

Published : Mar 24, 2020, 7:30 AM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் அடுத்தடுத்து உயிர்பலி ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400க்கு மேல் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விழிப்புணர்வு சிற்பங்கள்

குறிப்பாக, கைகளை கிருமி நாசினி கொண்டு நன்றாக கழுவ வேண்டும், பிறருடன் கை குலுக்கக்கூடாது, முகக் கவசம் அணிய வேண்டும், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள பழங்களில் சிற்பங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தேனியைச் சேர்ந்த இளைஞர். தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் இவர் பறவைகள், விலங்குகள் தலைவர்களின் உருவங்களை காய்கறி, பழங்களில் சிற்பங்களாக வரையும் திறமை படைத்தவர்.

வரைந்து அசத்தும் தேனி இளைஞர்

தற்போது கரோனா வைரஸ் தொற்று பீதியில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தர்பூசணி பழங்களில் சித்திரங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இதில் முகக்கவசம் அணிய வேண்டும்.! கை கொடுக்கக்கூடாது! கைகளைக் கிருமி நாசினி கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.! உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சித்திரங்களை வரைந்து அசத்தியுள்ளார்.

பொதுவாக இவர் உருவாக்கி வரும் காய்கறி சிற்பங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைப்பது உண்டு. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதனை பதிவேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொடர் கண்காணிப்பில் 12,519 பேர்!

ABOUT THE AUTHOR

...view details