தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்பூசணி சிற்பங்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு

தேனி: கூடலூரில் நகராட்சி, காவல் துறையினர் சார்பில் காய்கனி சிற்பத்தில் வரையப்பட்ட கரோனா மாதிரி பொம்மையை தலையில் அணிந்தவாறு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு
தேனி மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு

By

Published : Apr 26, 2020, 3:17 PM IST

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நோயின் தீவிரத்தை உணராத சிலர் பொதுவெளியில் தினந்தோறும் சுற்றித் திரிகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு

இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி, காவல் துறை சார்பில் கரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் கூடலூரைச் சேர்ந்த காய்கனி சிற்பக்கலைஞர் இளஞ்செழியன் என்பவர், தர்பூசணி பழத்தில் உருவாக்கிய கரோனா மாதிரி பொம்மையை தலையில் அணிந்தவாறும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்ட பழச் சிற்பங்களைக் கைகளில் ஏந்தியவாறும் துப்புரவுப் பணியாளர்களும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நண்பர்கள் குழுவினரும் வாகனங்களில் ஊர்வலமாகச் சென்றனர்.

தேனி மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு

முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும், வீட்டிலேயே இருக்க வேண்டும் உள்ளிட்ட தர்பூசணி பழங்களில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சை: தேனியில் 34 பேர் வீடு திரும்பினர்

ABOUT THE AUTHOR

...view details