தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை பணியாளர்கள் 49 பேர் உள்பட 297 பேருக்கு இன்று (ஆக.11) ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக நாகை, சீர்காழி ஆகிய பகுதிகளிலுள்ள கோவிட்-19 சிறப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை 8 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 100 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்து 2 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 453 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.