தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து பழைய ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே, எதிரே வந்த மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாட்டை காப்பாற்ற முயன்று பிரேக் அடித்த ஓட்டுநர்! அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து! - தென்கரை காவல்துறையினர் விசாரணை
தேனி: பேருந்தின் முன்வந்த மாட்டை காப்பாற்ற முயன்று ஓட்டுநர் பிரேக் அடித்ததால் பின்னால் வந்த அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
![மாட்டை காப்பாற்ற முயன்று பிரேக் அடித்த ஓட்டுநர்! அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4387145-thumbnail-3x2-ss.jpg)
இதனையடுத்து பேருந்தின் பின்னால் வந்த மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களின் வாகனமும் பிரேக் பிடித்து நின்றுள்ளது. இதனிடையே பள்ளி வாகனத்தின் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, அதன் மீது மோதியதால் அவ்வாகனம் அரசு பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் சுமார் 15க்கும் மேற்பட்டோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்கள். உடனடியாக மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.