தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கன மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை இந்த தொடர்மழை காரணமாக, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் குழந்தைகளை யாரும் வெளியில் அனுப்ப வேண்டாம் எனவும், அவர்களை பாதுகாப்பாக வைக்கவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி, மஞ்சாளார் அணை, ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவி, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் மஞ்சளாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்க:
கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை!