தொழில் நுட்ப வளர்ச்சியாலும், பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் உண்ணும் உணவு வரை இணையதள வர்த்தகத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இணையதள வர்த்தகமானது கிராமங்களை கூட விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக வெகுஜன மக்களிடையே நாள்தோறும் இணையதள வர்த்தகத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிறு, குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட் போன்ற இணையதள வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்படுவதாக தேனி மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.