தேனி மாவட்டம்பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவர் சில நாள்களுக்கு முன்பு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட நபர் இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த வினோத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.