தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரங்களைக் கடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை..! - Cumbum

சுருளி அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள அரசுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மரங்களை கடத்திய மர்ம நபர்கள்: நடவடிக்கை எடுக்காத அரசு
அரசாங்க மரங்களை கடத்திய மர்ம நபர்கள்: நடவடிக்கை எடுக்காத அரசு

By

Published : Dec 8, 2022, 1:49 PM IST

தேனி: கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியிலிருந்து சுருளி அருவிக்குச் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தூரம் பழைய சாலையைப் புதுப்பிக்கத் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

சாலை அமைக்கப்படும் இடத்தில் பழமை வாய்ந்த வேம்பு, மா உள்ளிட்ட பல வகை மரங்கள் இருந்தன. அந்த மரங்களை மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடியோடு வெட்டி கடத்தியுள்ளனர்.

அரசாங்க மரங்களை கடத்திய மர்ம நபர்கள் நடவடிக்கை எடுக்காத அரசு

இதனைப் பார்த்த ஊராட்சி நிர்வாகத்தினர், நாராயணத்தேவன்பட்டி கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். அனுமதியின்றி மரங்களை வெட்டியதால் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அந்த புகாரில், சாலை போடுவதற்காக வெட்ட வேண்டிய மரங்களை மர்ம நபர்கள் எந்த ஒரு தகவலும், அனுமதியும் இல்லாமல் வெட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் புளியமரம், மாமரம், தேக்கு மரம், சந்தன மரம் மற்றும் தென்னை போன்ற பல விலை உயர்ந்த மரங்களை வெட்டிச் சென்றுள்ளனர். மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி சென்றவர்களின் மீது இதுவரை வனத்துறையினரோ அல்லது மாவட்ட நிர்வாகத்தினரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தக்கூடிய செயலாகும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் சந்திரமோகன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details