தேனி: வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைக்கான இயக்கம் சார்பாக சுத்தபடுத்தும் பணிகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தப் பணிக்காக, பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை சாக்கடைக்குள் இறங்கி வெறும் கைகளால் சாக்கடை நீரில் வளர்ந்துள்ள செடி, கொடி அகற்றுமாறு வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களை கட்டாயபடுத்தியுள்ளனர்.
கட்டாயப்படுத்தி துப்பரவு பணியாளர்களை சுத்தம் செய்ய சொன்னதாக புகார்..! மேலும், இந்தப் பணிகள் அனைத்தும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுக நாயினார், மற்றும் பேரூராட்சி தலைவர் கீதா சசி முன்னிலையில் நடைபெற்றது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தில் தூய்மைப் பணியாளர்களைக் கட்டாயப்படுத்தி இந்தப் பணியில் ஈடுபடுத்திய பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும், பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுக நாயனரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து தான் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரியகுளத்தில் சாதியை சொல்லி ஆசிரியர்கள் திட்டுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு