தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழக்குடியினர் பகுதிகளில் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்! - Collector inspected welfare works

தேனி: போடி அருகே மேலப்பரவு மலைவாழ் கிராமத்தில், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று பார்வையிட்டார்.

நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!
நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

By

Published : Oct 21, 2020, 7:28 AM IST

தேனி மாவட்டம் போடி ஒன்றியத்தில் உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலப்பரவு மலைக்கிராமத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 169 பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் குடிநீர், சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளின் மேம்பாட்டு பணிகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தவிர, தமிழ்நாடு அரசால் துறைவாரியாக செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பழங்குடியின மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக, திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விரிவாக பழங்குடியினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் (2020-21) தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 6 பயனாளிகளுக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் தனி நபர் உரக்கிடங்கு அமைப்பதற்கென தலா ரூ.15,500 மதிப்பீட்டில் 7 பயனாளிகளுக்கும், தனி நபர் இல்ல கழிப்பறை அமைப்பதற்கென தலா ரூ.12,000 மதிப்பீட்டில் 14 பயனாளிகளுக்கும், 12 பயனாளிகளுக்கு தார் பாய்கள், 20 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்கள் மற்றும் 6 பயனாளிகளுக்கு வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். ரூபே அட்டை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பழங்குடியின மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வின்போது மேலப்பரவு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைந்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details