தேனி மாவட்டத்தின் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 14.47 கனஅடி வீதம், டிசம்பர் 15ஆம் தேதி முதல் 50 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேனி மாவட்டம் சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழுள்ள உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில், சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 14.47 கனஅடி வீதம், டிசம்பர் 15ஆம் தேதி முதல் 50 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.