தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

தேனி: சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர்
Sothupparai dam water opened

By

Published : Oct 22, 2020, 9:55 AM IST

தேனி மாவட்டம் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்காகவும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்காகவும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காகவும், தண்ணீர் திறந்துவிடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.

அவர்களது வேண்டுகோளினை ஏற்று, சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக சாகுபடிக்காக ஆயிரத்து 825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், ஆயிரத்து 40 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காவும் 2020ஆம் ஆண்டு அக்.26 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 15ஆம் தேதி வரை, முதல் 51 நாள்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், அடுத்த 31 நாள்களுக்கு விநாடிக்கு 27 கன அடி வீதமும், கடைசி 59 நாள்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதம் என் மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், மொத்தம் 2 ஆயிரத்து 865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details