கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இரவு, பகல் பாராமல் உழைத்து வரும் இவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, காலுறை உள்ளிட்டவைகளை அணிந்து பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் கையுறை, காலுறைகளை சரிவர கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் சிலருக்கு மட்டும் வழங்கப்படும் உபகரணங்களும் தரமற்றதாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்கள் கையுறைகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.