தேனி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 46 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் திமுக, அதிமுகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர். மாலையில் டெண்டர் திறக்கப்பட்டது.
இதில் குறைந்த தொகை நிர்ணயம் செய்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுவது வழக்கம்.
ஒன்றிய அலுவலகத்தில் திமுக - அதிமுக ஒப்பந்ததாரர்கள் மோதல் இந்த நிலையில் அதிமுக ஒப்பந்ததாரர்களுக்கும் திமுக ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே டெண்டர் எடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மோதலை தவிர்க்க போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து டெண்டர் எடுக்க இரு தரப்பினரும் தகராறு செய்யவே போலீசார் இரு தரப்பினரையும் அலுவலகத்தை விட்டு வெளியேற்றினர்.
இதையும் படிங்க:கோயில் திருவிழா... மாட்டுவண்டி பந்தயம்...