தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் நாற்காலிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! - Road stir with theni chairs

தேனி: சின்னமனூர் அருகே 18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் டி.சிந்தலைச்சேரி பகுதிக்கு வராததால் அப்பகுதி மக்கள் நாற்காலிகளுடன் போடி – சின்னமனூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் டி.சிந்தலைச்சேரி பகுதிக்கு வரவில்லை என சாலை மறியல்

By

Published : Nov 21, 2019, 7:33 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி கிராமம் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டுள்ளது. இப்பகுதியின் நீர் ஆதாரமாக 18ஆம் கால்வாய் திகழ்கிறது.

கடந்த மாதம் முல்லைப்பெரியாற்றில் இருந்து 18ஆம் கால்வாய் பகுதி பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் 18ஆம் கால்வாய் நீட்டிப்பு பகுதியான போடியில் கூவலிங்க ஆற்றிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

18ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் டி.சிந்தலைச்சேரி பகுதிக்கு வரவில்லை என சாலை மறியல்

இந்நிலையில், டி.சிந்தலைச்சேரியில் உள்ள அரசமரத்துக்குளம், நல்லகுளம் ஆகிய கண்மாய்கள் இன்னும் நிரம்பாததால் அப்பகுதி மக்கள் இன்று நாற்காலிகளுடன் திடீரென போடி – சின்னமனூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் வட்டாச்சியர், பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details