தேனி: கம்பத்தில் உள்ள உத்தமபுரம் பகுதியில் சிறுவர்கள் ஒன்றிணைந்து தாங்களாவே சேமித்த பணத்தை வைத்து விநாயகர் சிலை வாங்கி வழிபட்டுள்ளனர். பின் அதனை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் காவல் துறையினர் அந்த சிறுவர்களை தடுத்து நிறுத்தி, நீங்கள் அனுமதியின்றி இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
அதனால் அந்த சிலைகளை எடுத்துச் சென்று அவர்கள் வீட்டில் உள்ளேயே சிறுவர்கள் வைத்திருந்தனர். இதனால், அதிருப்தியடைந்த சிறுவர்கள், அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் சிலையை கரைக்க நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கியுள்ளனர்.
அனுமதி பெற்ற பின்பும் காவல் துறையினர் சிலையை கரைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறி, இன்று (செப்.04) கம்பத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு எதிராக விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அனுமதிக்க கோரி நூதன முறையில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.