தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி. ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ்(27). கூலி வேலை செய்துவரும் இவர், தனது முதல் மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்துவிட்டார். இத்தம்பதியினருக்கு ஐந்து வயதில் விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்த நிலையில், வினிதா என்ற வேறொரு பெண்ணை நாகராஜ்திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆறு மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுவன் விக்னேஸ்வரனை, இரண்டாவது தாய் வினிதா தன் துணிகளைத் துவைப்பதற்காக அழைத்துக்கொண்டு அருகிலுள்ள வண்ணாத்திப்பாறை கல்குவாரிக்குச் சென்றுள்ளார். அங்கு பாறைகள் மேல் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் விக்னேஸ்வரன் திடீரென தண்ணீரில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.