சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன்.14) இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை
- மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வறண்ட வானிலை
சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜூன்.15:
- நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை
- சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜூன்.16,17:
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ( நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜூன்.18:
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ( நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை வானிலை நிலவரம்
- அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
- அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு(சென்டிமீட்டரில்):
வால்பாறை (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 8, தேவலா (நீலகிரி) 7, கூடலூர் பஜார் (நீலகிரி) 6, சின்கோனா (கோவை) 5, பெரியாறு (தேனி) 4, க்ளென்மோர்கண் (நீலகிரி) 3, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), போளூர் (திருவண்ணாமலை), தளி (கிருஷ்ணகிரி), உடுமல்பேட்டை (திருப்பூர்) தலா 1 செ.மீ முறையே மழை பெய்துள்ளது.