தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூலவைகை ஆறு, முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் நீர்வரத்தால் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் (ஜனவரி 19) அணையின் நீர்மட்டம் 70.20 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,296 கன அடி வந்து கொண்டிருக்கிறது.13 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்ட உள்ளதால் அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மத்திய நீர்வளக் குழுவினர் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.