தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு! - முல்லைப் பெரியாறு அணை

தேனி: தென்மேற்கு பருவமவை கேரளாவில் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை

By

Published : Jun 4, 2019, 11:37 AM IST


கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.

2014 மே 7ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அணையைக் கண்காணித்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். உறுப்பினர்களாகத் தமிழ்நாடு பொதுப்பணித் துறைச் செயலர் பிரபாகரன், கேரள நீர்வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஸ்வால் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்புப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும். கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை மறுநாள் 6ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மூவர் குழுவினர் இன்று அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details