தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண்டிப்பட்டி - தேனி வழித்தடத்தில் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு!

மதுரை - போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் ஆண்டிப்பட்டி - தேனி பகுதியில் இன்று(மார்ச்.31) மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆண்டிப்பட்டி - தேனி வழித்தடத்தில் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு.
ஆண்டிப்பட்டி - தேனி வழித்தடத்தில் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு.

By

Published : Mar 31, 2022, 7:37 PM IST

மதுரை:மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை வழித்தடத்தில் 58 கி.மீ தூரமுள்ள தேனி வரையிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.‌ இதையடுத்து, இன்று(மார்ச்.31) ஆண்டிப்பட்டி - தேனி வரையிலான 17 கி.மீ தூரமுள்ள வழித்தடத்தில் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்தார்.

ஆண்டிப்பட்டி - தேனி வழித்தடத்தில் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு.

ஆண்டிப்பட்டி ரயில்நிலையத்தில் அவருடன் ரயில்வே கட்டுமானப்பிரிவு முதன்மை செயல் அலுவலர் பிரபுல்ல வர்மா, தலைமைப் பொறியாளர் இளம்பூரணன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டிப்பட்டி ரயில் நிலையம், நடைபாதை உள்ளிட்டப்பகுதிகளில் ஆய்வு நடத்திய பின், டிராலியில் அமர்ந்து தேனி வரை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தேனி - ஆண்டிபட்டி வரை அதிவேக ரயில் சோதனை இன்று(மார்ச்.31) நடைபெற்றது.

இதையும் படிங்க:'வார்டு பாய்களுக்கு 1 மாதம் ஹெல்ப் பண்ணுங்க' - பைக் ரேஸ் இளைஞருக்கு பலே தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details