தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CCTV: பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி; பைக்கில் மோதி தூக்கிவீசப்பட்ட அவலம்!

கேரளாவில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி சாலையைக் கடக்கும் போது பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிசிடிவி: பள்ளி முடித்து விடு திரும்பிய மாணவி பைக் மோதி வீசப்பட்ட காட்சி
சிசிடிவி: பள்ளி முடித்து விடு திரும்பிய மாணவி பைக் மோதி வீசப்பட்ட காட்சி

By

Published : Aug 11, 2022, 7:07 PM IST

தேனி:தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான குமுளி நகரில் செயின்ட் தாமஸ் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி அலோகா மரியம், இன்று மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது அட்டப்பள்ளம் லட்சம் வீடு காலனி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது மாணவி மீது பைக் மோதியதில் சாலையில் தூக்கிவீசப்பட்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக குமுளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, முதலுதவி செய்த பின் மேல் சிகிச்சைக்காக கட்டப்பனா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அட்டப்பள்ளம் முதல் மைல் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையின் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சிசிடிவி: பள்ளி முடித்து விடு திரும்பிய மாணவி பைக் மோதி வீசப்பட்ட காட்சி

இதையும் படிங்க: கண்ணகி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம்!

ABOUT THE AUTHOR

...view details