நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜிடம் இன்று சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் உள்ள அலுவலகத்தில் தென்மண்டல சிபிசிஐடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், கல்லூரி முதல்வரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதற்கு உரிய விளக்கத்தை அவர் அளித்து வருகின்றார்.
மேலும், இர்ஃபானின் தந்தை முகமது சபியிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று முதல் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.விஜயகுமார், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் இர்ஃபான் படித்து வந்தது கல்லூரி முதல்வரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.