நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, எஸ்.ஆர்.எம் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பிரிவின், சத்யசாய் கல்லூரியைச் சேர்ந்த அபிராமி, பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு தேனி சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆள்மாறாட்ட விவகாரத்தில் 3 கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன்! - நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்
தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மூன்று கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார், நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளார்.
இதில் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த மாணவர் பிரவின் ஆள்மாறாட்டம் செய்தது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, இவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, இரண்டு மாணவர்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்த சென்னை சத்ய சாய், பாலாஜி மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளார்.