தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு - குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - Theni District news

தேனி: ஆண்டிபட்டி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளி

By

Published : Nov 7, 2019, 10:58 PM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி(31). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதேப் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் கருப்புசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கருப்புசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளியை அழைத்து வரும் காவல்துறையினர்

மேலும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details