மதுரை:தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னாண்டி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் குரும்ப கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் முப்பது லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இந்த சமூகம் உள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகத்தினருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 108 சாதிகள் பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் குரும்ப கவுண்டர் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழ்நாடு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.