தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொது மக்களிடம் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பூதிப்புரம் பேரூராட்சியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தொகுதிக்குள் வந்தால் கொலை செய்யாமல் விடமாட்டேன் என ஆத்திரத்தில் கூறினார். அப்பெண்ணின் பேச்சை மு.க.ஸ்டாலின் கண்டித்தார்.