தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: இரண்டு பேர் மீது வழக்கு - மருத்துவப் படிப்பில் ஆள்மாறாட்டம்

சென்னை: நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக இருவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

MBBS exam

By

Published : Sep 18, 2019, 11:05 PM IST

தேனி மாவட்டம் க.விலக்கு அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ள சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆண்டிற்கு 100 மருத்துவ மாணவர்களுக்கு இக்கல்லூரியில் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் இந்த கல்வி ஆண்டில் சேர்ந்த 100 மாணவ-மாணவிகளில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் நீட் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் செய்ததாகவும், தேர்விற்கான ஹால் டிக்கெட்டில் உள்ள படமும் மாணவனின் படமும் வெவ்வேறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அசோக் என்ற மருத்துவ மாணவர், கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய புகாரைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து தேனி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த மாணவர் உதித் சூர்யா மீதும், கல்லூரியில் படித்து வரும் நபர் மீதும் 419, 420, 120 என மூன்று பிரிவுகளின் கீழ் கண்டமனூர் விலக்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக 7 காவல்துறை அலுவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக படிக்க: மருத்துவப் படிப்பில் ஆள்மாறாட்டம்: பதிலளித்த நாராயண பாபு

மேலும் படிக்க: "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?" - சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை கோரிய கல்லூரி நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details