மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஓபிஎஸ் மகன் மீது வழக்குப்பதிவு...! - ops son
தேனி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஓபிஎஸ் மகன் மீது போடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி போடி பகுதியில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ. ரவீந்திரநாத் கட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக வேஷ்டி உள்ளிட்டவைகளை வழங்குவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பரிசுப்பொருள் வழங்கிய குற்றத்திற்காக 174 பிரிவின் கீழ் ரவீந்திரநாத்குமார் மீது போடி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.