தேனி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சுற்றுலா செல்வதற்காக கேரள மாநிலம், மூணாறு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார் மூணாறு அருகே உள்ள பெரிய கானல் பகுதியில் உள்ள கேப் ரோடு என்ற மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு கீழே கவிழ்ந்தது.
50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மூணாறில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் 8 வயது சிறுவன் நைசா மற்றும் அவரது தாய் நவ்ஷத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மூணாறு பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி: கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு! - car lost control
மூணாறு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற கார் 50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு வயது சிறுவன் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார்