தேனி மாவட்ட எல்லையான காமக்காபட்டி சோதனைச் சாவடியில் தேவதானப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானலில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி, வீரமணி என்பதும் இவர்கள் இருவரும் கொடைக்கானலில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.