மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் சட்டமாக உள்ளது எனக் கூறி எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிவருகின்றனர்.
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குறியாக்குகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துவருகின்றனர். பாஜக இந்திய தேசம் என்னும் பெயரில் மத தீவிரவாதத்தைத் திணிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்த சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் மத்திய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை அமைக்க நினைக்கிறது என்றும் தெரிவித்துவருகின்றனர். டெல்லி கலவரம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.