தேனி:தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை காலை உணவாக ரொட்டி பால், பழம், முட்டை ஆகியவற்றை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் வழங்கி வருகின்றனர். ஒரு வருடத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஞாயிறுகளில் குழந்தைகளுக்கு இலவச உணவு.. விஜய் மக்கள் இயக்கம் அசத்தல்! - தேனி விஜய் மக்கள் இயக்கம் இளைஞர் அணி
தேனியில் குழந்தைகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Etv Bharatகுழந்தைகளுக்கு ஞாயிறு தோறும் காலை உணவு - தொடங்கி வைத்த விஜய் மக்கள் இயக்கம்
இந்நிலையில் தேனியில் விஜய் மக்கள் இயக்கம் இளைஞர் அணி சார்பில் குழந்தைகளுக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவு வழங்கி வரும் திட்டத்தை இன்று(நவ.27) முதல் தொடங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆகிய பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குழந்தைகளுக்கு காலை உணவாக ரொட்டி பால் பழம் ஆகியவற்றை வழங்கினர்.
இதையும் படிங்க:பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணமா? - கிருஷ்ணகிரி பகீர் சம்பவம்!