தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 27, 2020, 3:43 PM IST

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு ஆற்றில் தவறி விழுந்த சிறுவன்: தேடும் பணி தீவிரம்

தேனி: முல்லைப் பெரியாறு ஆற்றில் தவறி விழுந்த சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு ஆற்றில் தவறி விழுந்த சிறுவன்
முல்லைப் பெரியாறு ஆற்றில் தவறி விழுந்த சிறுவன்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தர்-பிரியா தம்பதி. இவர்களுக்கு யோகித் (4), நிகிலேஷ் (2) என இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதிக்கு சொந்தமான தென்னந்தோப்பு முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையோரம் உள்ளது.

இதனிடையே, யோகித், நிகிலேஷ் இருவரும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முல்லைப் பெரியாறு ஆற்றில் நிகிலேஷ் விழுந்தார். இதைப் பார்த்து யோகித் அழுததையடுத்து, அருகிலிருந்து விவசாயிகள் வந்து பார்த்தனர்.

அதற்குள், நிகிலேஷ் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார். உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை தேடி வருகின்றனர். முல்லைப் பெரியாறு ஆற்றில் நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details