தேனி: திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா 'பாமர இலக்கியம்' என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள மல்லிங்காபுரத்தில் பிறந்த கஸ்தூரிராஜா, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் கல்லூரி படிப்பை மேற்கொண்டார். பின்னாளில் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநராக உருவெடுத்த கஸ்தூரி ராஜா 930 பக்கங்களுக்கும் மேற்கொண்ட 'பாமர இலக்கியம்' என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
கஸ்தூரி ராஜா எழுதிய பாமர இலக்கியம் என்ற நூலின் சிறப்புகளை தேனி மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவும், கல்வி நிலையங்களில் உள்ள மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையிலும் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் கஸ்தூரிராஜா அவர்களின் தலைமையில் மாணவர்கள் மற்றும் கஸ்தூரி ராஜா இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களுடன் கலந்துரையாடிய இயக்குநர் கஸ்தூரி ராஜா ’தேனியின் மண் சார்ந்த பல்வேறு தகவலுடன் எளிய தமிழில் எழுதிய புத்தகத்தை தேனி மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காகவும், தற்காலத்தில் வளர்ந்து வரும் ஆங்கில மோகத்தை குறைப்பதற்கு, செல்போன் மற்றும் கணினி போன்ற பொருட்களில் தமிழில் தட்டச்சு செய்து செய்திகளை அனுப்பும் நோக்கத்தை வளர்ப்பதற்காகவும் ’பாமர இலக்கியம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளதாக’ இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ரூ.225 கோடி வசூல்: சாதனைப்படைத்த 'பிரம்மாஸ்த்ரா'!