தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் சட்டவிரோதமாக மது விற்ற மூவர் கைது!

தேனி: கம்பம் அருகே வீட்டில் பதுக்கிவைத்து கள்ளத்தனமாக மது விற்ற மூன்று பேரை காவலர்கள் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிகள்

By

Published : Mar 29, 2020, 8:00 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் அரசு மதுபானக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பலர் ராயப்பன்பட்டி பகுதியில் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்துகொண்டு கள்ளத்தனமாக வியாபாரம் செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் ராயப்பன்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தங்கம் என்பரின் மேல் சந்தேகம் ஏற்பட்ட காவல் துறையினர், அவரது வீட்டை சோதனை செய்தனர்.

சோதனையில், அவரது வீட்டில் 1420 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டிகள்

இதேபோல், கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி ஆகிய ஊர்களில் உத்தமபாளையம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுப்பட்டி பாபு என்பவரிடமிருந்து 35 மதுப்பாட்டில்களும், அனுமந்தபட்டியில் குட்டி என்பவரிடமும் 32 மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 500 மதுபாட்டில்கள் பறிமுதல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details