தேனி:பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகளிடம் சமூக ஆர்வலரான நந்தினி மற்றும் அவரது தங்கை நிரஞ்சனா இருவரும், பெரும் முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட 10.72 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி, கடனை முழுமையாக வசூல் செய்ய வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றை குறிப்பிட்டு நோட்டீஸ் வழங்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர் கொடிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். சகோதரிகள் இருவரையும் கைது செய்ய வேண்டுமென்று கோஷமிட்டனர். சகோதரிகளும் பாஜகவினரை கண்டித்து கோஷமிட்டனர். காவல்துறையினர் சகோதரிகள் நோட்டீஸ் வழங்குவதையும், கோஷமிடுவதையும் தடுக்க முயற்சித்தனர். இருப்பினும் சகோதரிகள் தொடர்ந்து நோட்டீஸ் வழங்கினர்.