தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது - கி.வீரமணி - BJP

தமிழ்நாட்டில் ஒரு கட்சியாகவே பாரதிய ஜனதா கட்சி இருக்க முடியுமே தவிர, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலையை எப்போதும் அடைய முடியாது என்றும்; மிஸ்டுகால் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட முடியாது எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியுள்ளார்.

மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது கீ.வீரமணி
மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது கீ.வீரமணி

By

Published : Jun 10, 2022, 10:24 PM IST

தேனி:பெரியகுளத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக மாநில உரிமைகள் மீட்பு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, 'மத்தியில் ஆளும் பாஜக அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.

அவர்கள் எப்பொழுதும் தமிழ்நாட்டில் ஒரு கட்சியாகத் தான் இருக்க முடியும். எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ ஆக முடியாது. சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும்.

மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது - கி.வீரமணி

மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது. சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக 100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி’என பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக, விடுதலைச்சிறுத்தைக் கட்சிகள் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்;ஓய்வு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details