தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே உள்ளது மஞ்சளாறு அணை. இப்பகுதியில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மலைப்பகுதியில் இருந்து வந்துள்ள காட்டு மாடு ஒன்று அங்குள்ள மின் வயரில் சிக்கி உயிரிழந்துள்ளது.
காட்டு மாடு உயிரிழப்பு – வனத்துறை அலுவலர்கள் மூவர் பணியிடை நீக்கம், ஒருவர் பணியிட மாற்றம்! - கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர்
தேனி: தேவதானப்பட்டி அருகே மின் வயரில் சிக்கி காட்டு மாடு உயிரிழந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காத வனவர், வனக்காவலர்கள் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வனச்சரக அலுவலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
bison died near manjalaru dam - forest official suspended
இதனை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் தோட்டத்தின் உரிமையாளர் அங்கேயே புதைத்துள்ளார். இது தொடர்பாக, வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தும் உரிய விசாரணை நடத்தாமல் காலதாமதம் செய்த தேவதானப்பட்டி வனவர் ஜெயராஜ், வனக்காவலர்கள் நடராஜ், பிரபு ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவதானப்பட்டி வனச்சரகர் சுரேஷ்குமாரையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.